2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

கலாசார விழாவும் முனை மலர் நூல் வெளியீடும்

Kogilavani   / 2012 ஜூன் 25 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2012ஆம் ஆண்டிற்கான 'கலாசார விழா' நிகழ்வும், 'முனை மலர்' நூல் வெளியீடும் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள் பல இடம்பெற்றதுடன், கலாசார பேரவை உறுப்பினர்கள் பலரின் ஆக்கங்களும் வெளிப்படுத்தப்பட்டன.

கல்முனை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி  பீ.பத்பராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலாசார பேரவையின் தலைவரும், பிரதேச செயலாளருமான எம்.எம்.நௌபல் கலந்துகொண்டதுடன், அதிதிகளாக கவிஞரும், நிர்வாக உத்தியோகத்தருமான எம்.பி.அபுல்ஹஸன், எழுத்தாளரும் தலைமை நிர்வாக கிராம உத்தியோகத்தருமான ஏ.எச்.ஏ.லாகிர், மொழிபெயர்ப்பாளர் என்.நயீம், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஸாலிஹ், பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.எல்.எம்.ஜெபர் உட்பட கலைதுறை சார்ந்தோர் பலரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X