2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

தேசிய கலை இலக்கியப் பேரவைக்கு பேராசிரியர் தில்லைநாதன் தலைமையில் புதிய மத்திய நிறைவேற்றுக் குழு தெரிவ

A.P.Mathan   / 2012 ஜூன் 22 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேசிய கலை இலக்கியப் பேரவையின் அனைத்திலங்கை மாநாடும் 39ஆவது ஆண்டுவிழாவும் கடந்த சனி, ஞாயிறு நாட்களில் (16, 17 ஜூன்) வெகு சிறப்பாக நிறைவெய்தின. அனைத்திலங்கை மாநாட்டில் தேசிய கலை இலக்கியப் பேரவையின் 2012 - 2015 காலப்பகுதிக்கான புதிய மத்திய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். தலைவராக பேராசிரியர் சி.தில்லைநாதன் அவர்களும் பொதுச் செயலாளராக பேராசிரியர் சி.சிவசேகரம் அவர்களும் பொருளாளராக செ.நந்தமோகன் அவர்களும் உபதலைவர்களாக குழந்தை ம.சண்முகலிங்கம், சிவ.இராஜேந்திரன், க.தணிகாசலம் ஆகியோரும் தெரிவாயினர். இலக்கியக் குழுச் செயலாளராக மு.மயூரன், கல்விக் குழுச் செயலாளராக சி.இதயராஜா நூலகச் செயலாளராக சு.விஐயகுமார், விநியோகச் செயலாளராக இரா.இரஞ்சன் ஆகியோரும் தெரிவாயினர்.

இலங்கை முழுவதும் பரவலாகப் பிரதேசப் பேரவைகளின் ஊடாகச் செயற்பட்டு வரும் தேசிய கலை இலக்கியப் பேரவையின் பிரதேசப் பேரவைச் செயலாளர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். யாழ்ப்பாணப் பிரதேசப் பேரவைச் செயலாளராக த.ஸ்ரீபிரகாஸும் ஹற்றன் பிரதேசப் பேரவைச் செயலாளராக எம்.சந்திரலேகாவும் நுவரெலிய பிரதேசப் பேரவைச் செயலாளராக ச.பன்னீர்செல்வமும் மாத்தளைப் பிரதேசப் பேரவைச் செயலாளராக ம.ருத்ராவும் இரத்தினபுரி பிரதேசப் பேரவைச் செயலாளராக பா.மகேந்திரனும் மட்டக்களப்புப் பிரதேசப் பேரவைச் செயலாளராக த.கோபாலகிருஷ்ணனும் வவுனியாப் பிரதேசப் பேரவைச் செயலாளராக நா.பகீரதனும் மன்னார்ப் பிரதேசப் பேரவைச் செயலாளராக ச.தனுஜனும் கொழும்புப் பிரதேசப் பேரவைச் செயலாளராக த.வி.ரிஷாங்கனும்; தெரிவாயினர்.

மத்திய நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினர்களாக சோ.தேவராஜா, ஜெ.சற்குருநாதன், சு.சுகேசனன், சி.கிருஷ்ணப்பிரியன், தி.அனோஜன், ம.மிதுன்ராகுல், லோ.நிலா சயானி, வி.விமலாதித்தன், சி.கஜேந்திரன், ச.சுதாகர், தெ.ஞா.மீநிலங்கோ ஆகியோர் தெரிவாயினர்.

1973 டிசெம்பர் இறுதியில் நிறுவப்பட்ட தேசிய கலை இலக்கியப் பேரவை கடந்த 39 ஆண்டுகளில் காத்திரமான பல பணிகளை நிறைவேற்றியுள்ளது. இந்த மாநாடு மற்றும் ஆண்டுவிழாவானது பேரவையின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முன்னின்று உழைத்த அனைவரையும் நினைவுகூர்ந்தது. பேராசிரியர் க.கைலாசபதி, இ.முருகையன், மாவை வரோதயன் ஆகியோரின் பணிகள் சிறப்பாகச்; சொல்லப்படவேண்டியன. 

இப்போது தேசிய கலை இலக்கியப் பேரவையின் பணிகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்க வல்ல ஓர் இளந் தலைமுறைப் படைப்பாளிகளும் விமர்சகர்களும் செயற்பாட்டாளர்களும் உருவாகியுள்ளனர். இது தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயற்பாடுகளுக்கு மேலும் ஊக்குவிப்பு அளித்துள்ளதுடன் நாடுதழுவிய முறையில் இலக்கிய, பண்பாட்டுத் தளங்களில் இளைஞர்கள் கூட்டாகச் செயற்படக்கூடிய ஒரு களத்தைப் பேரவை உருவாக்கியிருக்கிறது என்பதை இங்கு நினைவுகூரல் தகும். தனது 40ஆவது ஆண்டு நிறைவை நோக்கிப் பயணிக்கும் தேசிய கலை இலக்கியப் பேரவை 'புதிய ஜனநாயகம், புதிய வாழ்வு, புதிய பண்பாடு' என்ற தனது இலட்சியத்தின் அடிப்படையில் நம்பிக்கையோடு முன் செல்லும் என்பதை கடந்த வாரம் நிறைவுபெற்ற பேரவையின் அனைத்திலங்கை மாநாடும் 39ஆவது ஆண்டு விழாவும் சான்று பகர்ந்தன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X