2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

ஜெஸ்மி எம். மூஸா எழுதிய தமிழ் வினா விடைப்பேழை நூல் வெளியீடு

Super User   / 2012 ஜூன் 18 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


ஆசிரியரும் ஊடகவியலாளருமான ஜெஸ்மி எம். மூஸா எழுதிய தமிழ் வினா விடைப்பேழை எனும் நூல் வெளியீட்டு விழா சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

அகில இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் 59ஆவது பேராளர் மகாநாட்டின் ஒரு பகுதியாகவே இந்த நூல் வெளியீடு இடம்பெற்றது.
அதிபர் ஹபீறா சலீம் தலைமையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் நூல் ஆய்வுரையினை ஆசிரியர் அல்ஹாபிழ் ஏ.முபாரக் நிகழ்த்தினார்.

இந்நூலின் முதல் பிரதியினை அகில இந்திய முகாமைத்துவ கற்கை நிலையத்தின் பணிப்பாளர் மருதூர் ஏ. ஹஸன் நூலாசிரியரிடமிருந்த பெற்றுக்கொண்டார்.

மூன்று அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அகில இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் போராளர் மாநாட்டில் முதலாவது அங்கமாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தில் அங்கத்தவர்களாக இருந்து மரணித்தவர்களுக்காக குர்ஆன் ஓதி பிராத்தனை செய்யும் நிகழ்வும் இரண்டாவதாக நூல் வெளியீடும் மூன்றாவது அங்கமான இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் பேராளர் மகாநாடு நடைபெற்றது. இதன்போது, நடப்பு வருடத்துக்கான புதிய நிர்வாகிகளின் நியமனம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X