2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

மூத்த கவிஞர் கலாபூஷணம் தாமரைத்தீவானுக்கு மேன்மை பாராட்டும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஜூன் 10 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)

திருகோணமலையின் மூத்த கவிஞர் கலாபுஷணம் தாமரைத்தீவானை கௌரவிக்கும்  மேன்மை பாராட்டும் நிகழ்வு நேற்றுறு சனிக்கிழமை காலை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட கலை இலக்கிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில், சிரேஷ்ட சட்டத்தரணி ஆ.ஜெகசோதி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் செ.யோகராசா ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் தாமரைத்தீவானின் தடங்கள் என்ற பொருளிலும் பேராசிரியர் சி.மௌனகுரு கவிஞர் தாமரைத்தீவானின் கவிதைகளில் அனுபவ ஆளுமைகள் என்ற பொருளிலும் உரையாற்றினர்.

இதேவேளை, கிழக்கு மாகாண சபை உறுப்பினரான சட்டத்தரணி ந.வரதன் கவிஞர் தாமரைத்தீவானுக்கு மேன்மை பாராட்டல் பட்டயத்தை வழங்கினார். போராசிரியர் மௌனகுரு தாமரைத்தீவானுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X