2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

தேசிய கலை இலக்கியப் பேரவையின் அனைத்திலங்கை மாநாடு

A.P.Mathan   / 2012 ஜூன் 08 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய கலை இலக்கியப் பேரவை இவ்வாண்டு தனது 39ஆவது ஆண்டை நிறைவாக்குகிறது. இதனை முன்னிட்டு தேசிய கலை இலக்கியப் பேரவையின் அனைத்திலங்கை மாநாடு எதிர்வரும் 16ஆம், 17ஆம் திகதிகளில் 571/15 காலி வீதி, கொழும்பு-6 இல் அமைந்துள்ள பேரவையின் பணிமனையின் கைலாசபதி கேட்போர்கூடத்தில் நடைபெறும். மாநாட்டையொட்டிக் கலை இலக்கிய நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

16ஆம் திகதி காலை அங்கத்தவர்களுக்கான கூட்டமும், மதியம் திரைக்காட்சிகளும் இடம்பெறும். மாலையில், மக்கள் பாடல்கள் நிகழ்வும், "புதுவசந்தம் 2012" மாநாட்டு மலர் வெளியீடும், "சங்காரம்" நாடகமும் இடம்பெறும்.

17ஆம் திகதி காலையில் தேசிய கலை இலக்கியப் பேரவைத் தலைவர் பேராசிரியர் சி.தில்லைநாதனின் தலைமையில் கருத்தரங்கு நடைபெறும். இதில் "பேரழிவு ஆயுதங்கள்" எனும் தலைப்பில் திருமதி சந்திரலேகா, "நுகர்வும் விரயமும்" எனும் தலைப்பில் சற்குருநாதன், "போரைப் புறங்காணல்" எனும் தலைப்பில் ஸ்ரீ ப்ரகாஷ் மற்றும் "நிலைக்கக்கூடிய வளர்ச்சி" எனும் தலைப்பில் விஜயகுமார் ஆகியோர் உரைகளை ஆற்றுவர். மதியம் முதல் மாலைவரை இடம்பெறும் திரைப்படக் காட்சிகளை தொடர்ந்து, மாலையில் கவியரங்கம் இடம்பெறும்.

"வாழ்வைச் சந்தித்தல்" எனும் தலைப்பில் பேராசிரியரும் மூத்த கவிஞருமான சி.சிவசேகரம் தலைமை ஏற்று நடாத்தும் இக்கவியரங்கத்தில், "போர்க்களத்தில்" எனும் தலைப்பில் ரெஷாங்கன், "கலவியில்" எனும் தலைப்பில் மயூரன், "கனாப்பொழுதில்" என்ற தலைப்பில் பவனிதா மற்றும் "காலமுடிவில்" என்ற தலைப்பில் நிலா ஆகியோர் கவி ஆற்றுகை செய்வர். அதன் பின்னர், மாநாட்டின் இறுதி நிகழ்வாக யாழ்ப்பாணப் பிரதேசப் பேரவை வழங்கும் "சுப்பற்ற கொல்லை" எனும் நாடகமும் இடம்பெறும்.

மாநாட்டின் அனைத்துக் கலை இலக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்துரையாடல்களிலும் பங்குபற்றி மாநாட்டைச் சிறப்பிக்குமாறும் கண்டுகளியுறுமாறும் பேரவையின் மாநாட்டுக் குழுவினர் மிக்க அன்புடன் அனைத்துக் கலை இலக்கிய ஆர்வலர்களையும் கேட்டுக் கொள்கின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X