2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

''வேர் அறுதலின் வலி'' எனும் கவிதை நூல் வெளியீடு

Super User   / 2012 ஜூன் 04 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தை கவிதை வடிவில் ஆவணப்படுத்தும் நோக்குடன் ''வேர் அறுதலின் வலி'' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா  கடந்த சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஆகியவற்றின் தலைவருமான என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கைத்தொழில் முதலீட்டு அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் பொது செயலாளர் மாவை சேனாதிராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நூலின் முதற் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொண்டதுடன் கிண்ணியா அமீர் அலி நிகழ்வுகளை தொகுத்தளித்தார். கவிஞர் யாழ் அஸீம் கவி வாழ்த்துரைத்தார்.  யாழ் முஸ்லிம் இணையம் இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது
 
இந்நிகழ்வில் விருது பெற்ற மூத்த இலக்கிய படைப்பாளிகள்
 
1.    கவிமணி மௌலவி புஹாரி - காத்தான்குடி
2.    கலாபூஷணம் எஸ்.ஐ. நாஹுர்கனி - மாபோல
3.    ஏ.எல்.எம். சத்தார் – பாணந்துறை
4.    ரீ.எல். ஜவ்பர்கான் – காத்தான்குடி
5.    கவிஞர் ஜன்ஸி கபூர் – அநுராதபுரம்
6.    ஏ.எஸ். இப்ராஹீம் கலைமேகம் – மூதூர்
7.    கவிமணி நீலா பாலன் – வெலிமடை
8.    ஏ.எம்.எம். அலி – கிண்ணியா
9.    நவாலியூர்க் கவிராயர் – யாழ்ப்பாணம்
10.  கலாபூஷனம் அப்துல் லத்தீப் – புத்தளம்
11.  கலாபூஷனம் கே.எம்.ஏ.அஸீஸ் - சாய்ந்தமருது
 
இந்நிகழ்வில் சிறப்பு விருது பெறும் மூத்த படைப்பாளிகள்
 
1. கலாபூஷணம் கவிஞர் யாழ் அஸீம்
2. கலைவாதி கலீல்
3. முல்லை முஸ்ரிபா
















You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X