2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

'கண்ணீர்ப்பூக்கள்', 'கன்னி' கவிதை நூல்கள் வெளியீடு

Menaka Mookandi   / 2012 மே 23 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)
  
யாழ் இந்துக் கல்லூரி மாணவன் அருள்பரன் உமாகரன் எழுதிய கவிதை நூல்கள் இன்று புதன்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டன. கண்ணீர்ப்பூக்கள் மற்றும் கன்னி ஆகிய கவிதை நூல்களை பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யுவ பிறன்ட் பவுண்டேசன் நிறுவனப் பணிப்பாளர் க.செவ்வேள் வெளியிட்டு வைத்தார்.

கண்ணீர்ப்பூக்கள் மற்றும் கன்னி ஆகிய கவிதை நூல்களின் வெளியீட்டு விழா யாழ் இந்துக் கல்லூரி அதிபர் வி.கணேசராசா தலமையில் கல்லூரிய மண்டபத்தில் நடைபெற்றது.

நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இராமநாதன் கல்லூரியின் இளைப்பாறிய ஆசிரியை வை.கணேசபிள்ளை, மற்றும் யாழ் பல்கலைக்கழக வணிகபீட விரிவுரையாளர் பேராசிரியர் க.தேவராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

கண்ணீர்ப்பூக்களின் ஆவ்வுரையை யாழ் பல்லைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிகபீட பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி தி.வேல்நம்பி, கன்னி கவிதைநூலின் ஆய்வுரையை சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் ஆசிரியர் க.மகாலிங்கசிவம் ஆகியோர் நிகழ்த்தினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X