2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

'செவ்வாழை' சஞ்சிகை வெளியீடு

Kogilavani   / 2012 மே 20 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா,சுக்ரி)

வாழைச்சேனை இந்துக் கல்லூரியின் 'செவ்வாழை' சஞ்சிகை வெளியீடும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்லூரி முதல்வர் கே.தவராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான என்.திரவியம், பு.பிரசாந்தன், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி மற்றும் கல்வி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

'செவ்வாழை' சஞ்சிகையின் ஆய்வினை அகில இலங்கை கம்பன் கழக வவுனியா கிளை தலைவர் 'தமிழ் அருவி' ரீ.சிவகுமாரன் நடாத்தினார்.
இதன்போது, அதிதிகளால் 'செவ்வாழை' சஞ்சிகையின் பிரதிகள் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டதுடன் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களும், 2011ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் ஒன்பது பாடத்திலும் 'ஏ' பெற்ற மாணவியும் கௌரவிக்கப்பட்டனர்.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X