2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

'எனது உலகு' புகைப்பட கண்காட்சி

Kogilavani   / 2012 மே 17 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி, எஸ்.கே.பிரசாத்)


யாழில்  மீள்குடியேற்ற கிராமமான மறவன்புலோ சகலகலா வல்லி வித்தியாலயத்தில் 'எனது உலகு' எனும் தொனிப்பொருளிலான புகைப்பட கண்காட்சி இன்று புதன்கிழமை யாழ்.ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையத்தில் ஆரம்பமானது.

எஸ்.டி.சி நிறுவனத்தின் அணுசரனையுடன் மீள்குடியேற்ற  கிராமமான மறவன்புலோ சகலகலா வல்லி வித்தியாலய மணவர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதன்போது காட்சிக்கு வைக்கப்பட்டன.

சிறுவர்களிடம்; புகைப்பட கலையின் ஆர்வத்தை தூண்டும்   வகையில் மேற்கொள்ளப்பட்ட இக் கண்காட்சியானது பலரின் வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆரம்ப நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், கலைத்துறைப் பேராசிரியர் ஞானக்குமரன் ஆகியேர் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X