2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீபாத தேசிய கல்வியல் கல்லூரியின் குருநாதம் சஞ்ஜிகை வெளியீடு

Kogilavani   / 2012 பெப்ரவரி 21 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.கமலி)

ஹட்டன் பத்தனையில் அமைந்துள்ள ஸ்ரீபாத தேசிய கல்வியல் கல்லூரியின் 20 வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை கல்லூரி பிரதான மண்டபத்தில் குருநாதம் எனும் சஞ்ஜிகை வெளியிடப்பட்டது.

1992 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த கல்விக்கல்லூரியில் 75 வீதமான தமிழ் மொழி மாணவர்களும் 25 வீதமான சிங்கள மாணவர்களும் ஆசிரியர் பயிற்சியை பெற்றுக்கொள்கின்றனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு அனுமதியில் முன்னுரிமை வழங்கும் இக் கல்வியல்; கல்லூரி மலையக கல்வி வளர்ச்சியில் பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றது.

இன்று வெளியிடப்பட்ட சஞ்ஜிகையில் மலையக மற்றும் தேசிய கல்வி தொடர்பான கட்டுரைகள் சிறுகதைகள் கவிதைகள் என்பன மும்மொழியிலும் இடம்பெற்றுள்ளமை குறிப்படத்தக்கது.

இதன்போது, கலை கலாசார நிகழ்வுகளும்  இடம்பெற்றன.



 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .