2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

'சுவடுகள்' நூல் வெளியீடு

Kogilavani   / 2012 பெப்ரவரி 19 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

கிழக்கு மாகாண கூட்டுறவுத்துறை ஆணையாளரும் பதிவாளருமான எம்.சீ.எம்.ஷெரீபின் (ஜுவைரியா ஷெரீப்)  'சுவடுகள்' நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மூதூர் அந்-நஹார் மகளிர் மகா வித்தியால கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வைத்தியர் கே.எம். ஷாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைப் பேராசிரியர் எஸ்.யோகராசா கலந்துகொண்டார்.

நூல் அறிமுக உறையினை கிண்ணியா பிரதேச செயலக திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் ஏ.சீ.எம்.முஸ்இல் ஆற்றியதுடன் மூத்த எழுத்தாளர் எம்.எஸ். அமானுல்லா நூல் நயவுரையை வழங்கினார்.

சமூக சேவையாளரும் மூத்த எழுத்தாளருமான சுகைதா ஏ. கரீம் நூலின் முதற் பிரதியை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில்,  கல்வியலாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .