2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

வாகரைப் பிரதேச கலாசார விழா

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 28 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்,எம்.சுக்ரி,அனுருத்ரன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலகத்திற்கான கலாசார விழா வம்மி வட்டவான் வித்தியாலத்தின் சந்திரகாந்தன் கலையரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒரு சமூகத்தின் வரலாற்றில் கலாசாரம்  முதன்மை பெறுகின்றது.    அந்த வகையில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் அப்பிரதேசங்களை பிரதிபலிக்கின்ற கலை, கலாசார அம்சங்களைக் கொண்ட கலாசார நிகழ்வு பிரதேச கலாசார பேரவையினால் நடத்தப்படுகின்றது.  வாகரைப் பிரதேசத்திற்கே உரித்தான பல்வேறு கலை அம்சங்களை பிரதிபலிக்கின்ற கலாசார நிகழ்வுகளான நாட்டுக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றன நடைபெற்றன. இதன்போது 'வாகை' என்னும்  சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

வாகரைப் பிரதேச செயலாளர்  ராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார். கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவருமான நா.திரவியம், வாகரைப் பிரதேசத்தின் ஆதீனக்குடிகளின் தலைவர், மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மலர்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .