2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

ஈரான் தூதரக கலாசாரப் பிரிவில் இலங்கை இலக்கியவாதிகளின் சந்திப்பு

Super User   / 2011 நவம்பர் 02 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஈரான் இஸ்லாமியக் குடியரசு தூதரக கலாசாரப் பிரிவில் இலங்கையின் பிரபல தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பங்கேற்ற சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது.

இஸ்லாமிய உலகில் தற்போது ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான நிலை, இன்றைய உலகச் சூழலில் ஈரானின் பங்களிப்பு, மற்றும் இஸ்லாமிய கலை மற்றும் கலாசார விடயங்களில் பாரசீகத்தின் பங்களிப்பு என்பன குறித்து கவிஞர்களும், எழுத்தாளர்களும் தமது கருத்துக்களை சுதந்திரமாக முன்வைத்தனர்.

மேடையில் பிரபல எழுத்தாளர்கள் டொமினிக் ஜீவா, அஷ்ரப் சிஹாப்தீன், நாகூர் கனி ஆகியோர் அமர்ந்திருப்பதையும். நிகழ்வுக்கு வருகை தந்தோரை கலாசாரப் பிரிவின் பணிப்பாளர் மஹ்தி ஜி ரொக்னி வரவேற்று உரை நிகழ்த்துவதையும்,  இச்சந்திப்பில்  கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .