2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார், சுக்ரி, ரி.லோஹித்)

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா இன்று வெள்ளிக்கிழமை காலை பண்பாட்டுப் பவனியுடன் மட்டக்களப்பில் கோலாகலமாக ஆரம்பமாகியது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், காணி, காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா இவ்வருடம் மட்டக்களப்பில் நடைபெறுகின்றது.

இன்று முதல் 16ஆம் திகதி வரை மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள இவ்விழாவில் மாகாணத்தின் கலை இலக்கியப் பண்பாட்டு விழுமியங்களை எடுத்துக் காட்டும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
 
இன்று காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிமனை முன்பாக அமைந்துள்ள புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் உருவச் சிலைக்கு முன்னாள் கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் காணி, காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சின் பிரதிச் செயலாளரும் ஜீ.ஐ.இசற்ஃ ஈ.எஸ்.சீ நிறுவன திருகோணமலை நிபுணத்துவ ஆலோசகருமான எஸ்.தண்டாயுதபாணியினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் வலயக் கல்விப் பணிமனையில் இருந்து பண்பாட்டுப் பணியுடன் கோலாகலமாக தமிழ் இலக்கிய விழா ஆரம்பமானது.

இன்று மாலை 3.00 மணிக்கு பண்டிதர் செ.பூபாலப்பிள்ளை அரங்கில் முதல்நாள் நிகழ்வு மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சா.பவளகாந்தன் தலைமையில் இடம்பெறுகிறது. நாளை 15ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு இரண்டாம் நாள் நிகழ்வு பண்டிதை கங்கேஸ்வரி கந்தையா அரங்கில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஜெய்னுதீன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

16ஆம் திகதி 3.00 மணிக்கு மூன்றாம் நாள் இறுதி நிகழ்வு பேராசிரியர் கா.சிவத்தம்பி அரங்கில் கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் காணி, காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சின் பிரதிச் செயலாளர் ஏ.எம்.ஈ.போல் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் கலந்துகொள்ளவுள்ளார்.கௌரவ விருந்தினர்களாக கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் காணி காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சர் விமரவீர திஸாநாயக்கவும் கெயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமாரவும் கலந்து கொள்ளவுள்ளனர். இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகளும் இலக்கியத் தேர்வுக்கான முதலமைச்சர், ஆளுனர் விருதுகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .