Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Kogilavani / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(க.கோகிலவாணி)
கொழும்பில் இடம்பெற்று வரும் தேசிய சிறுவர் நாடக விழாவின் மூன்றாம் நாளான நேற்று செவ்வாய்க்கிழமை 'அப்பள்' எனும் சிங்கள நாடகம், 'பிரென்ட்ஸ்' எனும் ஆங்கில மொழி நாடகம், 'எதிர்காலம் எமக்காய்' எனும் தமிழ் மொழி நாடகம், 'கதாந்தர தேஷயட சவாரியக்' எனும் சிங்கள மொழி நாடகம் ஆகியன மேடையேற்றப்பட்டன.
'அப்பிள்'
'அப்பிள்' எனும் சிங்கள மொழி நாடகமானது, ரத்னபுரியைச் சேர்ந்த 'சாரிந்தா' எனும் நாடகக் குழுவினால் மேடையேற்றபட்டது. சிறார்கள் பங்குப்பற்றிய திறந்த நாடகமான இதில் 12 பேர் பாத்திரமேற்றிருந்தனர். டிலானி காஞ்சனாமால அமரதுங்கவின் எழுத்துருவில் நிலங்க நாமல் உடுமுல்ல என்பவர் இந்நாடக்தை நெறிப்படுத்தியிருந்தார்.
ஒரு அப்பிள் பழத்திற்காக பூச்சிகளும் புளுக்களும் சண்டையிட்டுக்கொள்வதும் பின்பு அவை ஒற்றுமையாகி அதனை எவ்வாறு பகிர்ந்து உண்ணுகின்றன என்பதே இதனது கதைக்கருவாக அமைந்நிருந்தது.
'பிரென்ட்ஸ்'
விடுமுறை கிடைத்தால் அதனை சிறுவர்கள் எவ்வாறு பிரயோசனமாக பயன்படுத்தலாம் என்பதையும் நட்பின் வலிமையையும் விளக்கிடும் நாடகமாக 'பிரென்ட்ஸ்' எனும் நாடகம் மேடையேற்றப்பட்டது. பன்னிப்பிட்டியவிலிருந்து 'அக்கடமி ஒவ் லிடடில் பெஸ்டிவல்' எனும் குழுவினரால் இந்நாடகம் மேடையேற்றபட்டிருந்தது. திருமதி மாலா மாரசிங்க இந்நாடகத்தை எழுதி நெறியாள்கை செய்யிருந்தார். திறந்த நாடகமான இதில் தரம் 3,6,7 வகுப்பு மாணவர்கள் பாத்திரமேற்றிருந்தனர்.
'எதிர்காலம் எமக்காய்'
முதியோர்களின் வழிக்காட்டல்களை அலட்சியம் செய்யும் சிறுவர்களின் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், பழைமையின் முக்கியத்துவத்தை எடுத்தியம்புவதாக இந்நாடகத்தின் கதையம்சம் அமைந்திருந்தது. வஃ வவுனியா இலங்கைச் திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்கள் நடித்திருந்த இந்நாடகத்தை நாடகமும் அரங்கியலும் ஆசிரியர் பி.கிருஷ்ணவேனி நெறியாள்கை செய்திருந்தார்.
'கதாந்தர தேஷயட சவாரியக்'
ஆரம்பக் காலங்களில் வீட்டின் முற்றத்தில் சிறார்கள், முதியவர்கள் இணைந்த கதைக்கூறும் மரபுக் காணப்பட்டது. அதனை மையக்கருவாகக் கொண்டு அதனூடாக ஒற்றுமையை வலியுறுத்தும் நாடகமாக இந்நாடகம் உருவாக்கப்பட்டிருந்தது. பொலன்னறுவையிலிருந்து வருகை தந்திருந்த 'வின்வித நாட்டிய நாடக கலை மன்றம்' குழுவினர் இந்நாடகத்தை மேடையேற்றினர். டி.கே.ஆர்டிகலாவின் எழுத்துருவிலும் நெறியாள்கையின் கீழும் இந்நாடகம் உருவாக்கப்பட்டிருந்தது.
கொழும்பு, ஜோன் டி சில்வா அரங்கில் இடம்பெற்றுவரும் இவ் தேசிய சிறுவர் நாடக விழாவானது எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Hot water Thursday, 15 September 2011 12:49 AM
தேசிய நாடக விழா திட்டம் கலைஞர்களுக்கு சிறந்த ஊக்குவிப்பாகும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
29 Apr 2025
29 Apr 2025