2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கிளிநொச்சி மாவட்டத்தின் முதலாவது கலாசார விழா

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 11 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்சாத் றஹ்மத்துல்லா)    

கிளிநொச்சி மாவட்டத்தின் முதலாவது கலாசார விழா முழங்காவில் மகாவித்தியாலய மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

பூநகரி பிரதேச கலாசார பேரவையால் நடத்தப்பட்ட இவ்விழாவானது, கிளிநொச்சி உதவி அரசாங்க அதிபர் சு.வசந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

முழங்காவில் பிள்ளையார் கோவில் முன்றிலிலிருந்து விருந்தினர்கள் முழங்காவில் மகாவித்தியாலயம் நோக்கி அழைத்துவரப்பட்டு விழா ஆரம்பமானது.

காலை, மாலை அமர்வுகளாக நடைபெற்ற இவ்விழாவைக் கௌரவப்படுத்தும் வகையில் பூந்துணர் என்ற சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டது. சஞ்சிகையின் வெளியீட்டுரையை உதவித் திட்டமிடற் பணிப்பாளர் வி.சொக்கனாதன் ஆற்றினார். சஞ்சிகையின் விமர்சன உரையை கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசன் வழங்கினார். கிளிநொச்சி மாவட்ட உதவி அரசக்ங்க  அதிபர் சு.வசந்தகுமார் நூலை வெளியிட்டு வைக்க கிளிநொச்சி அரசக்ங்க  அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

மது விலக்கு அவசியமா? அவசியமில்லையா என்ற தலைப்பில் பட்டிமண்டபம் இடம்பெற்றது. இந்து,  இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்களைப் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகளும் ஆற்றுகை செய்யப்பட்டன. முள்ளியவளைக் கலைஞர்கள் வழங்கிய கோவலன்கூத்து மாலை அரங்கின் சிறப்பு நிகழ்வாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் தி.இராசநாயகம், மேலதிக அரசக்ங்க அதிபர் ஸ்ரீநிவாசன், பூநகரி பிரதேசசபைத் தவிசாளர் ஸ்ரீஸ்கந்தராஜா, கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசன், கரைச்சி, கண்டாவளை பிரதேச செயலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .