2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

'வள்ளுவமும் விவிலியமும்', 'இன்னுமோர் இன்பத்துப்பால்' நூல்கள் வெளியீடு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 05 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)
பேராசிரியர் அன்ரனி கோன் அழகரசன் எழுதிய 'வள்ளுவமும் விவிலியமும்', முகில்வானன் எழுதிய 'இன்னுமோர் இன்பத்துப்பால்' எனும் நூல்களின் வெளியீட்டு நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு வில்லியம் ஓள்ட்  மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு எழுத்தாளர் பேரவை, செங்கதிர் வாசகர் வட்டத்துடன் இணைந்து இந்நூல்களின் வெளியீட்டு நிகழ்வை நடாத்தியது.

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் அருட்தந்தை ஏ.நவரட்னம் (நவாஜி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் நுன்கலை பீடாதிபதி பேராசிரியர் சி.மௌனகுரு உட்பட பிரமுகர்கள் எழுத்தாளர்கள் முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .