2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கலை ஊடாக நட்பு: இலங்கையில் இந்தோனேஷிய கலை நிகழ்ச்சிகள்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 28 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(க.கோகிலவாணி)
'கலை ஊடாக நட்பு' எனும் தொனிப்பொருளில் இந்தோனேஷிய கலைக்குழுவினர் நடத்தும் இந்தோனேசியாவின்  பாரம்பறிய நடன நிகழ்வு எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கையில் இருக்கும் மக்கள் இந்தோனேஷியாவின் பாரம்பரிய கலைகள் பற்றி புரிந்துக்கொள்வதற்காகவும் இக்கலை நிகழ்வினூடாக இருநாட்டுக்குமிடையில் நட்புறவை மேம்படுத்துவதற்காகவும்  இந்நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என இலங்கைக்கான இந்தோனேஷிய தூதுவர் டிஜபார் ஹுஸைன் கூறினார்.

கொழும்பிலுள்ள இந்தோனேஷிய தூதரகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில்,  
'இலங்கையில் கடந்த கால சூழலானது அவ்வளவு தூரம் சிறப்பாக அமையவில்லை. தற்போது இலங்கையில் நல்லதொரு சூழ்நிலை  உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இந்தோனேஷியாவிலிருந்து வருகைத் தரும் இந்தோனேஷிய கலாசார குழுவினர் இந்தோனேஷியாவின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்.' என்றார்.(Pix By :-Indrathna Balasuriya)

43 பேரை  உள்ளடக்கிய இக்குழுவானது ஏற்கெனவே லிஸ்பன் (போர்த்துக்கல்), புடாபெஸ்ட் (ஹங்கேரி), கெய்ரோ (எகிப்து), பீஜிங், தாய்வான்;, டோக்கியோ, பாங்கொக், கோலாலாம்பூர், மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்கும்; சென்று தமது பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரவுள்ள இக்குழுவினர் செப்டெம்பர் 6ஆம், 7 ஆம் திகதிகளில் கொழும்பிலும் 8 ஆம்திகதி காலியிலும் நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .