2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

'பாரம்பரியத்தை தேடி' கருத்துக்களம்

Sudharshini   / 2016 ஜூலை 27 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.எல்.லாபீர்

யாழ்ப்பாணம் பிரதேச செயலக கலாசார சபையின் ஏற்பாட்டில் 'பாரம்பரியத்தை தேடி' எனும் கருத்துக்கள நிகழ்வு, பிரதேச கலாசார மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை(26) நடத்தப்பட்டது.

யாழ்;ப்பாணம் பிரதேச செயலாளர் பொ.தயானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக சின்யாமிஷன் சுவாமி கலந்துகொண்டார்.

தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.கபலின், யாழ்;.பிரதேச கலாசார சபை உறுப்பினர்கள், மாதர் சங்கங்கள், கிராம அபிவிருத்திச் சங்கம், பாரம்பரிய உணவு தாயாரிப்போர், கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

கருத்துக்களில் பாரம்பரிய தொல்பொருட் சின்னங்கள், பாரம்பரிய உணவு தயாரிப்பு, பனை அபிவிருத்தி, கலை வடிவங்கள் மற்றும் மறைந்து போகும் பறை கலை வடிவங்களுக்கு புத்துயிர் அளிக்கும் செயற்பாடுகள் பற்றியும் கருத்துக்களத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X