Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 ஜூலை 04 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் 13ஆவது திருக்குறள் மாநாடு கிளிநொச்சி கூட்டுறவுச் சபை மண்டபத்தில் கடந்த 1ஆம் திகதி நடைபெற்றது.
காலை மற்றும் மாலை என இரண்டு பிரிவுகளாக இடம்பெற்ற நிகழ்வில், காலை நிகழ்வு கிளிநொச்சி கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. பிறேமா மதுரநாயகம் தலைமையில் நடைபெற்றது.
இதில் முதன்மை விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா கலந்துகொண்டார்.
மாலை நிகழ்வு, தமிழ்ச் சங்க தலைவர் நா.சோதிநாதன் தலைமையில் நடைபெற்றமு. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா கலந்துகொண்டார்.
இதன்போது, மாநாட்டில் கலந்துகொண்டு, நிகழ்வுகளில் பங்குகொண்ட மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.
வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை உரையாற்றுகையில்,
“கிளிநொச்சி மாவட்டம் யுத்த காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கியது. குறிப்பாக தேசிய மட்டங்களில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற காலமாக அக்காலத்தினை சொல்ல முடியும். அக்காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் 900 ஆசிரியர்களே கடமையாற்றினர். அதிலும் 600 பேர் தொண்டர் ஆசிரியர்கள் ஆவார்கள்.
அதிக திறமைகளை வெளிக்காட்டிய கிளிநொச்சி மாவட்டம் இன்று கல்வியில் பின்தங்கியுள்ளது. இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களில் 25 ஆவது மாவட்டமாக விளங்குகின்றது. யுத்த காலத்தில், ஆசிரியர் பற்றாக்குறையின் மத்தியில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் இன்று 2,000க்கும் அதிகமான ஆசிரியர்கள் கடமையாற்றுகின்ற போதும் கல்வியில் முன்னேற்றம் இல்லாமல் இருக்கின்றது” என்றார்.
நிகழ்வில் உரையாற்றிய மாவை சேனாதிராசா கூறுகையில்,
“ஒழுக்கம் தொடர்பில் திருக்குறள் எடுத்தியம்புகின்றது. இன்று அதிக கல்வியியலாளர்கள் உள்ள யாழ்ப்பாணத்தில் ஒழுக்கம் பேணப்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது. அதிகளவான கலாசார மாற்றங்கள், போதைப்பொருள் பாவனை, பாலியல் வல்லுறவுகள் என ஒழுக்கம் தொடர்பில் நீதியாளர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வித்தியாவின் கொலை போன்று பல சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றனர். மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. யுத்த காலத்தில் அதிகளவில் தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் இன்று கல்வியில் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராயப்பட வேண்டும்” என்றார்.
கிளிநொச்சி தமிழ் சங்கம் வெள்ளி விழா காணவுள்ள நிலையில், சங்கத்துக்கு கட்டடம் அமைப்பதற்கான ஒரு பகுதி நிதியை தான் வழங்குவதாக இதன்போது மாவை உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
57 minute ago
2 hours ago