2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

'இஸ்லாமிய சரித்திரக் கதைகள்'

Sudharshini   / 2016 ஜூலை 27 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

அப்துல் காதர் லெப்பையின் 'இஸ்லாமிய சரித்திரக் கதைகள்' எனும் கதை கூறும் கவிதை நூல் வெளியீட்டு விழா, கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் ஆங்கில விரிவுரை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்றது.

பேராதனை பல்கலைக்கழக சிங்களத்துறை விரிவுரையாளரான ஜனாபா லிறீனா அப்துல் ஹக்; இந்நூலை தொகுத்துள்ளார். சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  நூல் வெளியீட்டுரையை தென்கிழக்கு பலக்லைக்கழக மொழித்துறை தலைவர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாவும் கருத்துரையை ஏ.பி.எம்.இத்ரீஸ் நழிமியும் பதிப்பாசிரியர் உரையை நூல் பதிப்பாசிரியர் ஜனாபா லிறீனா அப்துல் ஹக்கும் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில், அப்துல் காதர் லெப்பையின் மகனான அவுஸ்ரேலியா நாட்டின் மேர்டொக் பல்கலைக்கழகத்தின் விரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ஏ.சி.அமீர் அலி கலந்;துகொண்டு ஏற்புரையை நிகழ்த்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X