2025 ஜனவரி 07, செவ்வாய்க்கிழமை

இறுவட்டு வெளியீடு

Niroshini   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, பொத்துவில் மெதடிஸ்த ஆலயத்தின் அருட்திரு எஸ்.ஜ.ஜோசப்பின் 'நித்தியவெளிச்சம் பாகம் 3 தெய்வம் மனிதனானார்' எனும் கிருஸ்தவ பக்தி இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் சந்திரநேரு முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு இலங்கை இறையியல் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளர் அருட்திரு ஏ.ஆர்.மகேந்திரன் மதிப்பிட்டுரையை நிகழ்த்தியதுடன் இறுவட்டுக்கான அறிமுக உரையை கல்முனை சேகரம் முகாமைக்குரு ஜே.டபிள்யு.யோகராசா நிகழ்த்தினார்.

இதன்போது,பாடலாசியர் அருட்திரு எஸ்.ஜோசப்,இசையமைப்பாளர் என்.மேகனராஜு ஆகியோர் பொன்னாடைப் போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X