2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

ஸர்மிலா ஸெய்யத்தின் "சிறகு முளைத்த பெண்" கவிதை நூல் அறிமுகம்

Super User   / 2012 நவம்பர் 19 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


காலச்சுவடு பதிப்பித்து தமிழ் நாட்டில் வெளியான ஏறாவூர் ஸர்மிலா ஸெய்யத்தின்  "சிறகு முளைத்த பெண்" கவிதை நூல் அறிமுகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை  தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் டாக்டர் தி.ஞாணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சரும் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டார்.

'சிறகு முளைத்த பெண்' கவிதை நூலின் அறிமுக உரையை  பலாலி ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் அதிபர் கவிஞர் சோ. பத்மநாதனும் நூல் ஆய்வினை சட்டததரணியும் கவிஞருமான மர்ஸூம் மௌலானாவும் ஏற்புரையை ஸர்மிலா ஸெய்யத்தும் நிகழ்த்தினர்.

இந்த நூலின் முதற் பிரதியை கவிஞரும் வைத்திய கலாநிதியுமான தாஸிம் அகமது அமைச்சர் ஹக்கீமிடமிருந்து பெற்றுக்கொண்டார்

நாடாளுமன் உறுப்பினர் பசீர் சேகுதாவூத், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் சாந்தி சச்சிதானந்தன், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி முன்னணியின் அன்பேரியா ஹனீபா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் உட்பட பலர் கலந்துகொண்டனர். (படங்கள்: ஏ.எஸ்.எம்.ஜாவித்)



















You May Also Like

  Comments - 0

  • AZHAHIM Wednesday, 21 November 2012 09:43 AM

    இவர் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்குமாறு புதிய அறிக்கை விட்டிருக்கிறாரே!!! "சிறகு முளைத்த பெண்" என்றால் விபச்சாரத்தை சட்டபூர்வமாக மேற்கொள்ளும் பெண் என்றா அர்த்தம்???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .