2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

அசர்பைஜான் நாடக குழுவின் 'CONTRABASS' நாடகம் மேடையேற்றம்

Kogilavani   / 2013 ஏப்ரல் 03 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் ஏற்பாட்டில் அசர்பைஜான் நாடக குழுவின் 'CONTRABASS' நாடகம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை மேடையேற்றப்பட்டது.

இரண்டாவது கொழும்பு உலக அரங்க விழாவை முன்னிட்டு இந்நிகழ்வு கிழக்குப் பல்கலைக்கழக பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் கலாநிதி கே.ஜெயசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்குப் பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் கலாநிதி முத்துலட்சுமி வினோபாவா, கலைக் கலாசார பீட பீடாதிபதி எம்.செல்வராசா, பேராசிரியர் சி.மௌனகுரு, இந்திய நாடக விமர்சகர் கலாநிதி அஜய் யோசி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, அசர்பைஜான் நாடகக் குழுவினர் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையினருக்கு நினைவுப்பரிசு  ஒன்றை வழங்கி வைத்தனர்.

இதேவேளை, கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையினரின் நடமாடும் கலரியும் தோரணமும் மற்றும் நாடகங்கள் தொடர்பான போஸ்ட் காட்கள் என்பனவும் இடம்பெற்றன.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X