2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

வவுனியாவில் 6 நூல்களின் அறிமுக விழா

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 21 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்மணி  கே.கே.அருந்தவராஜாவின் (மேழிக்குமரன்) 6 நூல்களின் அறிமுக விழா வவுனியா ஆதிவிநாயகர் ஆலய பாலாம்பிகை மண்டபத்தில் இன்று  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வவுனியா தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்து கொண்டார்.

'ஜேர்மனியில் தமிழர் வரலாறு' நூலினை வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் தமிழ்த்துறை விரிவுரையாளர் ந.பார்த்திபனும் 'காலச் சுவடுகள்' நூலினை வவுனியா தெற்கு கல்வி வலய தமிழ் பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் த.நிறைமதியும் 'தாலி' சிறுகதைத் தொகுப்பினை வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் தமிழ்த்துறை விரிவுரையாளர் நெலோமி அன்ரனி குரூசும்  'ஆன்மாவின் வாசனை' நூலினை வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய தமிழ் ஆசிரியர் ஆ.லோகேஷ்வரனும் 'தாய் நிலம்' கவிதை நூலினை கவிஞர் குரும்பையூர் த.ஐங்கரனும் 'நலமாய் வாழ' நூலினை ஓய்வுபெற்ற அதிபர் ச.க.தியாகலிங்கமும் நயம் கண்டு உரையாற்றினர்.  ஏற்புரையினையும் நன்றியுரையினையும் நூல்களின் ஆசிரியர் மேழிக்குமரன் ஆற்றினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X