2024 டிசெம்பர் 24, செவ்வாய்க்கிழமை

நல்லைக்குமரன் 21ஆவது மலர் வெளியீடு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்

நல்லைக்குமரன் மலரின் 21 ஆவது நூல் வெளியீடு புதன்கிழமை பிற்பகல் 12.30 க்கு நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

நல்லைக்குமரன் மலர் 21 ஆவது பதிப்பின் முதற்பிரதியினை யாழ்ப்பாண மாநகரசபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, மாநகர ஆணையாளர் செ.பிரணவநாதன், நூலாசிரியர் ந.விஜயசுந்தரம் ஆகியோர் வெளியிட்டு வைக்க வழமைபோல தெல்லிப்பளை துர்க்கா தேவஸ்தானம் பெற்றுக்கொண்டது.

இந்நிகழ்வின்போது, கலை கலாசாரத்தை வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள திருமறைக் கலாமன்ற இயக்குனர் அருட்தந்தை நீ.மரியசேவியரை யாழ். மாநகரசபை சைவசமய விவகாரக் குழவினர் பாராட்டியதுடன் யாழ்.விருதும் பொற்கிழியும் வழங்கி கௌரவித்தனர்.

இன்றைய நிழக்வில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சார்யர், பருத்தித்துறை ஸ்ரீ சாரதாதேவி சேவாச்சிரம தலைவர் சித்ரூபாவனந்தா, யாழ்ப்பாணம் சின்மயாமிஷன் வதிவிட ஆச்சாரியார் சைதன்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X