2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

'கல்யாண ரங்க- 2011'

Kogilavani   / 2011 நவம்பர் 14 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)
மத்திய மாகாண இந்திய - இலங்கை கலாசார சங்கம் ஏற்பாடு  செய்த 'கல்யாண ரங்க- 2011'   கலை நடன நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கண்டி இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்; இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராகேஷ் குமார் மிஸ்ரா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது உரையாற்றிய அவர்,

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் ஒரு பாலமாக பாரத கலைகள் காணப்படுகின்றன. இலங்கை - இந்தியா இரு நாடுகளுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இருப்பினும் இவ்விரு நாடுகளையும் ஒன்றினைப்பதில் கலைஞர்கள் பெரும் பங்கை வகிக்கின்றனர். அந்தவகையில் இரு நாட்டுக் கலாசாரத்தையும் வளர்க்க உதவுகின்ற கலைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .