2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

இளம் இயக்குநர் கோவர்த்தனனின் 2ஆவது குறும்படம் திரையிடும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


இந்தியாவில் கற்றுவரும் மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் இயக்குநர் கோவர்த்தனனின் இரண்டாவது குறும்படமான  CHECK  MATE இன் திரையிடும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை  மாலை மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் இடம்பெற்றது.

பு.கோவர்த்தனன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் புனித மிக்கேல் கல்லூரியன் அதிபர் திருமதி மாசிலாமணி, கிழக்குப் பல்கலைக்கழக விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் பிரேம்குமார் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

இதன்போது  'நானும் ஒரு தாய்' என்ற குறுந்திரைப்படமும் திரையிடப்பட்டது.

கோவர்த்தனனின் முதலாவது குறுந்திரைப்படமான நானும் ஒரு தாய் இந்தியாவில் வெளியிடப்பட்டதுடன், இந்தியாவில் ஏழு விருதுகளையும் இலங்கையில் ஒரு தேசிய விருதையும் பெற்றுக் கொண்டது.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .