2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

'இருக்கும்வரை காற்று' கவிதை நூல் வெளியீடு

Kogilavani   / 2012 ஜூலை 08 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏயெம் தாஜ் எழுதிய 'இருக்கும்வரை காற்று' கவிதை நூல் வெளியீடு எதிர்வரும் 15 ஆம் திகதி மாலை  4 மணிக்கு கொழும்பு, டீ.ஆர்.விஜேவர்த்தன மாவத்தையிலுள்ள தபால் தலைமயக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில், உலகத்தமிழ் ஒளிபரப்பாளர் பிச்.அப்துல்ஹமீத் தலைமை உரையை ஆற்றவுள்ளார்.

இதேவேளை, கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.அனீஸ், பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் துறைத் தலைவர் கலாநிதி துரை மனோகரன், கொழும்பு பல்கலைக்கழக சட்டப்பீட பீடாதிபதி வி.ரி.தமிழ்மாறன் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எச்.எம்.பௌஸி, கே.என்.டக்ளஸ் தேவானந்தா, ஏ.எல்.எம்.அதாஉல்லா, ரிஷாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், முன்னாள் நாடாளுமன்ற தர்லிங்கம் சித்தார்தன் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .