2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

நாவலர் விழா 2014

Kogilavani   / 2014 டிசெம்பர் 19 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலர் நற்பணி மன்ற ஏற்பாட்டில் நாவலர் விழா – 2014 நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(21) கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில், கருத்தரங்கு, நூல் வெளியீடு, பட்டிமன்றம்  என்பவை இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வானது காலை, மாலை என இரு அமர்வுகளாக நடைபெறவுள்ளது. காலை 9.30 மணியிலிருந்து 12.30 மணிவரை நடைபெறவுள்ள முதல் அமர்வில்;, கடவுள் வாழ்த்து, தமிழ் வாழ்த்துக்களை இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் பாடவுள்ளனர்.

வரவேற்புரையை நாவலர் நற்பணி மன்றத்தின் தலைவர் ந.கருணை ஆனந்தனும் வாழ்த்துரையை  பொன்னம்பவலவாணேஸ்வரர் ஆலயத்தின் அறங்காவலர் டி.எம்.சுவாமிநாதனும் தலைமையுரையை பேராதனைப் பல்கலைக்கழக தகைசார் பேராசிரியர் சி.தில்லைநாதனும் சிறப்புரையை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசனும் நிகழ்த்தவுள்ளனர்.

'கல்வியியலாளர் நாவலர்' என்ற தலைப்பில் பேராசிரியர் சி.தில்லைநாதன் தலைமையில்   கருத்தரங்கத்தில்  இடம்பெறவுள்ளது.

இக்கருத்தரங்கில், 'நாவலரின் கல்விக் கொள்கையும் பாடத்திட்டமும்'' என்ற தலைப்பில் க.இரகுபரனும் 'நாவலரின் ஆசிரிய ஆளுமை' என்ற தலைப்பில் பேராசிரியர் செ.யோகராஜாவும் நாவலரின் பாடசாலைகள் என்ற தலைப்பில் கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தனும் நாவலரின் பாடநூல்கள் என்ற தலைப்பில் பேராசிரியர் வ.மகேஸ்வரனும் உரையாற்றவுள்ளனர்.

நன்றியுரையை நாவலர் நற்பணிமன்றத்தின் உபதலைவர் எஸ்.புண்ணியசீலன் ஆற்றவுள்ளார். மாலை 5 மணிமுதல் 8 மணி வரை நடைபெறவுள்ள மாலை அமர்வில் கடவுள் வாழ்த்து தமிழ் வாழ்த்துக்களை அ.ஆரூரன் நிகழ்த்தவுள்ளார்.
வரவேற்புரையை நாவலர் நற்பணி மன்றத்தின் ந.கருணை ஆனந்தனும் வாழ்த்துரையை சைவப்புலவர் சு.செல்லத்துரையும் தலைமையுரையை யாழ்.பல்கலைக்கழக தகைசார் பேராசிரியர் சி.க.சிற்றபலமும் நிகழ்த்தவுள்ளனர்.
இதன்போது 'கல்விப் பணியில் நாவலர்' என்ற நூல் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. நூலின் வெளியீட்டு உரையை திருமதி.பத்மா சோமகாந்தன் ஆற்றவுள்ளார்.
இதேவேளை, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் அறக்கட்டளை ஸ்தபாகிக்கப்பவுள்ளது.
தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் 'நாவலர் கனவு நனவாகிவிட்டதா| என்ற தொனிபொருளில் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. இப்பட்டிமன்றத்தில் கொழும்பு, மொரட்டுவை, பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர்.
நன்றியுரையை திருமதி க.உமாகரன் வழங்கவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X