2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

'டான்ஸ் ஸ்ரீலங்கா – CCMA' போட்டிகளில் பங்குபற்றும் சந்தர்ப்பம்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 02 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏர்கோ சொலூஷன்ஸ் மூலம் இலங்கையில் 'டான்ஸ் ஸ்ரீலங்கா – CCMA' போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த போட்டியின் மூலம் இலங்கையின் பாரம்பரிய நாட்டிய கலாசாரத்தை சர்வதேச அரங்குக்கு கொண்டு சென்று மதிப்பை ஏற்படுத்துவது நோக்கமாக அமைந்துள்ளது. இதற்காக பிரபல்யம் பெற்ற நிறுவனமான சிற்றிசெல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. Citycell - Channel-i Music விருதுகள் (CCMA) ஊடாக இந்த சர்வதேச மதிப்பு இலங்கையின் நாட்டியத்துறைக்கு வழங்கப்படவுள்ளது. இலங்கையில் இந்த போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், ஒக்டோபர் 27ஆம் திகதி மாபெரும் கலை நாட்டிய நிகழ்வாக இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றியீட்டுவோர், இந்தியாவின் கொல்கத்தா நகரில் நடைபெறவுள்ள சர்வதேச ரீதியில் இடம்பெறும் மாபெரும் நடன கலை நிகழ்வில் பங்குபற்றி தமது திறமைகளை உலகுக்கே வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பை பெற்றுக் கொள்வர்.

இந்த போட்டி குறித்து அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அண்மையில் கொழும்பு மவுன்ட்லேவ்னியா ஹோட்டலில் இடம்பெற்றது. 'டான்ஸ் ஸ்ரீலங்கா – CCMA' என்பது, எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதி இந்தியாவின் கொல்கத்தா நகரில் இடம்பெறவுள்ள 8ஆவது CCMA போட்டிகளின் ஒரு சகோதர நிகழ்வாக அமைந்துள்ளது. பங்களாதேஷை சேர்ந்த முன்னணி தொலைத்தொடர்புகள் சேவைகளை வழங்கும் நிறுவனமான சிற்றிசெல், பங்களாதேஷின் முன்னணி தொலைக்காட்சி நாளிகையான சனல்-ஐ போன்றன ஒன்றிணைந்து 2004ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகளை வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன. இந்த விருதுகள் வழங்கலின் நோக்கம், பெங்காலி சங்கீதத்தை பின்பற்றும் கலைஞர்களை இனங்கண்டு கௌரவிப்பதாக அமைந்துள்ளது.

இந்த விருதுகள் குறித்து, சிற்றிசெல் நிறுவனத்தின் தொடர்பாடல்கள் பிரிவின் தலைமை அதிகாரி தஸ்லிம் அஹமட் கருத்து தெரிவிக்கையில், 'கடந்த 7 ஆண்டுகளில் CCMA என்பது பெருமளவு வளர்ச்சி கண்டு, சர்வதேச நிகழ்வாக மாற்றமடைந்துள்ளது. இலங்கை, நேபாளம், பூட்டான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளை சேர்ந்த பெருமளவான கலைஞர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றி தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர். இலங்கையின் பிரபல பாடகியான நந்தா மாலினிக்கும் அவரது அளப்பரிய சேவையை பாராட்டி கௌரவித்து விருது வழங்கப்பட்டுள்ளது' என்றார். 

டான்ஸ் ஸ்ரீலங்கா – CCMA என்பது, நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டம் 50 பேரை தெரிவு செய்யும் சுற்றாக 5 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. இரண்டாம் சுற்று, 40 சிறந்த திறமைசாலிகளுடன் நடைபெறும் நிகழ்வாக அமையவுள்ளது. பின்னர் பங்குபற்றுநர்களுக்கு 12 தலைப்புகள் அவர்களின் தெரிவுக்காக வழங்கப்பட்டு பின்னர், குறித்த தினத்தில் தெரிவு செய்யப்படும் தலைப்பில் தமது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். தியாவின் கொல்கத்தா நகரில் நடைபெறும் மாபெரும் இறுதி சுற்றில் நடுவர்கள் குழாமில் சிற்றிசெல் மற்றும் Cahnnel i போன்ற நிறுவனங்களை சேர்ந்த மேலும் இரு மத்தியஸ்தர்கள் இணைந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கையில் நடைபெறவுள்ள நடனப் போட்டிகளில் பங்குபற்ற விரும்புபவர்கள் இம்மாதம் 7ஆம் திகதிக்கு முன்பாக 0775884662, 0727884662 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாகவோ அல்லது ergo_damien@live.com என்ற மின்னஞ்சலினூடாகவோ தொடர்புகொள்ளலாம்.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .