2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

பேராசிரியர் க.கைலாசபதியின் மறைவின் 30ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு ஆய்வரங்கும் கலை நிகழ்ச்சிகளும்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 06 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


பேராசிரியர் க.கைலாசபதியின் மறைவின் 30ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு தேசிய கலை இலக்கியப் பேரவை நடாத்தும் ஆய்வரங்கும் கலை நிகழ்ச்சிகளும் எதிர்வரும் 9ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை வெள்ளவத்தையில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைமை பணிமனையில் இடம்பெறவுள்ளது.

ஆய்வரங்கு - காலை அமர்வு, மாலை அமர்வு என இரு அமர்வுகளாக நடைபெறும். காலை அமர்வு காலை 9.15 மணி முதல் 1.00 மணி வரையும், மாலை அமர்வு 2.00 மணி முதல் 5.00 மணி வரையும் நடைபெறும். காலை அமர்வுக்கு பேராசிரியர் சி.சிவசேகரமும் மாலை அமர்வுக்கு பேராசிரியர் சி.தில்லைநாதனும் தலைமை வகிப்பர்.

ஆய்வரங்கை தொடர்ந்து கலை நிகழ்சிகள் இடம்பெறும். அதில் இரத்தினபுரிப் பிரதேசப் பேரவை வழங்கும் மக்கள் பாடல்களும் யாழ்ப்பாணப் பிரதேசப் பேரவை வழங்கும் நாடகமும் இடம்பெற இருக்கிறது. அத்துடன் சிறப்பு திரைக்காட்சியும் இடம்பெறும்.

ஆய்வரங்கின் காலை அமர்வில் ‘இலக்கியத்தின் மூலம் வரலாற்றை அறிதல்’ என்ற தலைப்பில் ஆய்வுரையை சபா.தனுஜனும் கருத்துரையை க.இரகுபரனும்,‘பேச்சுமொழியும் செம்மொழியும்’ என்ற தலைப்பில் ஆய்வுரை: மை.பன்னீர்ச்செல்வம், கருத்துரை: ம.சு.தேவகௌரி, ‘தேசியவாதமும் தொன்மைக்கான வேட்கையும்’ என்ற தலைப்பில் ஆய்வுரை: த.ஸ்ரீபிரகாஸ், கருத்துரை: ஜெ.சற்குருநாதன். ‘சமயச் சார்பின்மையும் வழிபாட்டுச் சுதந்திரமும்’ என்ற தலைப்பில் ஆய்வுரை: ப.மகேந்திரன், கருத்துரை: வீ.தனபாலசிங்கம். ‘மாறிக்கொண்டிருக்கும் மரபு’ என்ற தலைப்பில் ஆய்வுரை: ச.சத்தியதேவன், கருத்துரை: சோ.தேவராஜா.

ஆய்வரங்கின் மாலை அமர்வில் ‘திறனாய்வில் சமூகப் பார்வைக்கான தேவை’ என்ற தலைப்பில் ஆய்வுரை: நா.பகீரதன், கருத்துரை: த.இராஜரட்ணம், ‘தமிழரிடையே தொடரும் சாதியச் சிந்தனை’ என்ற தலைப்பில் ஆய்வுரை: தி.அனோஜன், கருத்துரை: சி.கா.செந்திவேல். ‘உலகமயமாதலில் தாய்மொழிக் கல்வியின் தேவை’ என்ற தலைப்பில் ஆய்வுரை: A.C.R.ஜோன், கருத்துரை: பேராசிரியர் சோ.சந்திரசேகரம். மத அடிப்படைவாதமும் ஏகாதிபத்தியமும் என்ற தலைப்பில் ஆய்வுரை: மெ.சி.மோகனராஜன், கருத்துரை: சிவ.இராஜேந்திரன்.

நிகழ்வில் பங்குபற்றுபவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என்பதையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துக் கொள்கிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .