2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

தேசிய கலை இலக்கியப் பேரவையின் "மாபெரும் புத்தகக் கண்காட்சியும் - மலிவு விற்பனையும்"

A.P.Mathan   / 2012 ஜூன் 18 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய கலை இலக்கியப் பேரவையின் வவுனியா பிரதேச பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள "மாபெரும் புத்தகக் கண்காட்சியும் - மலிவு விற்பனையும்" எதிர்வரும் 23, 24ஆம் திகதிகளில் (சனி, ஞாயிறு) வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலையத்தின் ஐயாத்துரை மண்டபத்தில் தினமும் மு.ப. 9 மணி தொடக்கம் பி.ப 7 மணி வரை இடம்பெறவுள்ளது.

இதில் விசேட விலைக் கழிவுகள் வழங்கப்படவுள்ளன. ஆகக் குறைந்தது 10 - 30 வீதம்வரை விலைக்கழிவு வழங்கப்பட இருப்பதுடன், நூலகங்களுக்கு மேலும் விசேடமான விலைக் கழிவு வழங்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இதுவரை இடம்பெற்றிராத அளவில், இலங்கை, இந்திய வெளியீட்டாளர்களின் 2000இற்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக் கண்காட்சியில் குமரன் புத்தக இல்லம், சேமமடு புத்தக சாலை, தேசிய கலை இலக்கியப் பேரவை, லங்கா புத்தக சாலை பேன்ற ஈழத்து வெயியீட்டாளர்களின் நூல்களும், இந்தியாவின் முக்கியமான முற்போக்கு வெளியீடுகளும், ராதுகா பதிப்பகம், மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் ஆகியவற்றின் வெளியீடுகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இக் கண்காட்சியில் பங்குபற்றுகின்ற பாடசாலைகளிற்கு அப் பாடசாலைகளின் நூலக அபிவிருத்தியின் பொருட்டு தேசிய கலை இலக்கியப் பேரவையினரால் புத்தகப் பொதி அன்பளிப்பாக வளங்கப்படவுள்ளது. இக்கண்காட்சியில் கலந்து கொள்வதன் மூலம் புத்தகப் பண்பாட்டினூடாகப் புதுயுகம் ஒன்றைப் படைப்பதற்கான முதலடியை எடுத்துவைக்க அனைவரையும் அழைக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X