2024 நவம்பர் 02, சனிக்கிழமை

'காலி இசை விழா 2014' .

Kogilavani   / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


செல்வநாயகம் ஜனகன்


யாழ்.இசை விழா 2013 இன் துணை நிகழ்வான 'காலி இசை விழா 2014' எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி காலி கோட்டை மூன் பாஸ்டியனில் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

சேவாலங்கா மன்றத்துடன் இணைந்து ரிக்ஸ்கொண்சேட்டன், அரு ஸ்ரீ கலையகம் மற்றும் நோர்வே தூதரகம் இணைந்து இவ்விழாவினை காலியில் மூன்றாவது தடவையாக நடத்தவுள்ளன.

இது தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை (21) கொழும்பு, தாஜ் ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு தொடர்பில் உரையாற்றிய ஏற்பாட்டு குழுவினர்,

'அனைவரையும் ஒன்றினைக்கும் நோக்கில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் இசை நிகழ்வானது இம்முறையும் நாட்டுப்புற கலைகள், சர்த்திரிய நடனங்கள் மற்றும் கீழைத்தேச, மேலைச்தேச கலைஞர்களின் இசை நிகழ்வுகளுடன் சங்கமமாகவுள்ளது.

எம்நாட்டுக் கலைகளை சர்வதேச கலைஞர்களும் சர்வதேச கலைகளை நம் நாட்டு மக்களும் அறிந்துகொள்ளும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்நிகழ்வில் இம்முறையும் நோர்வே, பங்களாதேஷ், பிரேசில், இந்தியா மற்றும் பலஸ்தீன் போன்ற சர்வதேச நாடுகளின் இசைக்குழுக்களும் பங்குபற்றவுள்ளன.

இந்நிகழ்வில், கீழைத்தேச இசைக்குழுக்கள் 10 மற்றும் மேசைத்தேச இசைக்குழுக்கள் 5 என்றவகையில் மொத்தமாக 15 இசைக்குழுக்களின் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

கீழைத்தேச இசைக்குழுவில், கோலிதபானு மற்றும் குழு, நொண்டி நாடகம் (மட்டக்களப்பு), திரிலோகா, ஒரியன்டல் இசைக்குழு, சொக்காரி (தம்புல்ல), டொனிஹாசன் மற்றும் மலாய் இசைக்குழு, தமிழ் இசைக்குழு (யாழப்பாணம்), நாட்ரோ, நடன்ட, மேரியன்ஸ் ஆகியன இடம்பெறவுள்ளன.

சிறுவர்களுக்கான விழா...

இந்நிகழ்வில் மற்றுமொரு விசேட அம்சமாக 'அனைவருக்காகவும் இசை' என்ற தொனிபொருளில் சிறுவர்களுக்கான விழா ஒன்றும் ஏற்படுத்தப்படவுள்ளது. இவ் விழா காலி இசைவிழாவின் முதல் நாளான மார்ச் 14 ஆம் திகதி காலை 9 மணிக்கு தர்மபால காடின்ஸ் தோட்டத்தில் இடம்பெறவுள்ளது.

இசை ஒரு பொதுமொழி என்பதையும் அதை சிறுவர்களும் விளங்கிகொள்வார்கள் என்பதையும் காலி இசைவிழாவினூடாக அறிந்துகொள்ள முடியும் என எதிர்பார்க்கிறோம். இந்நிகழ்வில் பங்குபெறும் சிறுவர்கள் கீழைத்தேச,  மேலைத்தேச இசைகளை உள்வாங்கிகொண்டு எதிர்காலத்தில் அவர்களும் சிறந்த இசை கலைஞர்களாக உருவாவதற்கான சந்தரப்பங்கள் உருவாக்கப்படும் என நாம் நம்புகின்றோம்.

அதுமட்டுமல்லாது சிறுவர்களுக்;கு அனுபவிக்கத்தக்க கலை வடிவங்களான இசை, நடனம், மற்றும் இசை அமைப்பது எவ்வாறு எனும் அறிமுகம், பாடல் வரிகள், நிகழ்படம், தயாரிப்பு, குரல் பயிற்சி, ஒலிச்சேர்க்கை, சுற்றாடல் திட்டங்கள், ஊட்டச்சத்து தொடர்பான நிகழ்வுகள், சித்திரம் வரைதல் தொடர்பான பயிற்சி பட்டறைகள் மற்றும் ஏனைய பல நிகழ்ச்சிகளையும் அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பமாகவும் இது அமையும்.

காலி இசைவிழா இலவசமாக நடத்தப்படவுள்ளதுடன் அனுமதி சீட்டுக்கள் இன்றி அனைவரும் வந்து ஒன்றாக சங்கமமாகி சர்வதேச இந்த இசை விழாவை கண்டுகளிக்க முடியும்' என தெரிவித்தனர்.  

கொழும்பு இசை விழா...

இதேவேளை, 'காலி இசை விழா 2014இன்  தொடர் நிகழ்வாக மேலைத்தேய இசைக்குழுக்களின் உள்ளக அரங்க இசை விழா எதிர்வரும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி கொழும்பு காலி முகதிடலில் மாலை 5.30 மணிமுதல் இரவு 10.30 வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் மேலைத்தேய இசைக்குழுக்கள் மட்டுமல்லாமல் சில கீழைத்தேச இசைக்கழுக்களும் பங்குபற்ற உள்ளன' என்றும் தெரிவித்தனர்.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில், சேவாலங்கா மன்றத்தின் விழா  இணைப்பாளர் கௌசல்யா நவரட்ன பெரேரா, நோர்வே தூதரகத்தின் கவுனசலர் டேக்னி மிஜோஸ், கலாசூரி அருந்ததி ஸ்ரீ ரங்கநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர். (படங்கள்: குஷான் பதிராஜ)




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .