2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

ஒக்டோபர் முழுமதி நாளின் கவித்துறை நிகழ்வு "பாடிப்பறை"

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 24 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களைப் பாடுதலையும் மக்களைப் பற்றிப் பேசுதலையும் பணியாய்க் கொண்ட கவிதைகளுக்குக் களமாய் அமைந்த "பாடிப்பறை" கவித்துறை நிகழ்வு கடந்த ஓராண்டிற்கும் மேலாக வெற்றிநடை போட்டு வருகின்றது. அதன் வழியே, இம்மாதமும் எதிர்வரும் போயா விடுமுறையான 29-10-2012 அன்று மாலை 4.30 மணியில் இருந்து 6.30 மணிவரையில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் முதலாவதாக "வதை முகாமிலிருந்து" என்ற மொழிபெயர்ப்புக் கவிதையும் "ஈழத்துக் கவிதைகளில் மலையகக் கவிதைகள்" என்ற தலைப்பிலான ஆய்வுரையும் இடம்பெறவிருக்கின்றன. அடுத்ததாக, கவிஞர் கிருஷ்ணபிரியன் எழுதிய "வேரின் பிரசவங்கள்" என்ற கவிதைத் தொகுப்பைப்பற்றிய உரையை மு.மயூரன் நிகழ்த்துவார். பாடிப்பறை நிகழ்வின் இறுதிப்பகுதியாக "அந்தரத்தில் இருப்பவர்கள்" எனும் தலைப்பிலான கவியரங்கம் சிவ ராஜேந்திரனின் தலைமையில் நடைபெறும். இக் கவியரங்கத்தில் சை.கிங்ஸ்லி கோமஸ், ஜே.சரண்யா, சு.சிவசக்தி, தி.அனோஜன் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கவிதைகளைப் பகிர்வார்கள்.

சமூக அக்கறையுள்ள மானுடத்தை உருவாக்குதலையும் சகமனிதர்களின் மேல் அன்பு செலுத்துதலையும் சொல்லித்தரும் படைப்புகள் அருகிவரும் இலக்கியச்சூழலில், தனது இலக்கில் இருந்து மாறாத உறுதியுடன் பயணிக்கும் "பாடிப்பறை" நிகழ்வில் பங்குபெற அனைவரையும் அழைக்கின்றோம்.

இடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை
571/15, காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு-06

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .