2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

ஹொங்கொங்கின் சீனப் பல்கலைக்கழக மாணவர்கள் வந்தனர்

Editorial   / 2024 டிசெம்பர் 27 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

​டி.கே.ஜி. கபில 

ஹொங்கொங்கின் சீனப் பல்கலைக்கழகத்தில் பயிலும் இளங்கலை மாணவர்கள் 16 பேர், இலங்கைக்கான 10 நாள் கள ஆய்வுப் பயணத்தில் ஈடுபடுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை, வெள்ளிக்கிழமை (27) காலை வந்தடைந்தனர்.

 "இலங்கையில் பெண்களின் உரிமைகள்" என்ற தலைப்பில் இந்த ஆய்வுப் பயணத்தில் ஈடுபட்டு ஆய்வுக் கட்டுரையை தயாரிக்க உள்ளனர்.

இது தவிர ஜா-எல, பமுனுகம கொன்சால்வேஸ் கல்லூரியின் 50 மாணவர்களை பயன்படுத்தி மற்றொரு செயற்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த ஆய்வுப் பயணத்தின் பின்னர், இந்த மாணவர்கள் சீகிரியா மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களுக்கு பயணத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

இந்த இளங்கலை மாணவர்கள் குழு, ஹொங்கொங்கில் இருந்து Cathay Pacific Airlines விமானமான CX-611 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வெள்ளிக்கிழமை (27) நள்ளிரவு 12 மணியளவில் வந்தடைந்தது. இந்த மாணவர்களுக்கு இலங்கையில் YMCA நிறுவனம் வசதிகளை வழங்குகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X