2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

வீதி விபத்தில் மூவர் காயம்

Janu   / 2024 ஓகஸ்ட் 13 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் - சிலாபம் பிரதான வீதியின் முந்தல் மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில்  திங்கட்கிழமை (12) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் காயமடைந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளத்தில் இருந்து சிலாபம் நோக்கிச் பயணித்த  குறுந்தூர தனியார் பஸ் ஒன்று முந்தல்  வைத்தியசாலைக்கு அருகே உள்ள பஸ் தரிப்பிடத்தில் நின்ற போது, மதுரங்குளியில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த  முச்சக்கர வண்டியொன்று பஸ்ஸில் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரங்குளி - ஹிதாயத் நகரைச் சேர்ந்தவர்கள் இவ்விபத்து சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தின் போது படுகாயமடைந்த  மூவரும் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஸீன் ரஸ்மின்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .