Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Janu / 2024 ஏப்ரல் 18 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொரணை - அங்குருவத்தோட்ட பிரதான வீதியில் பல்லாபிட்டிய பாடசாலைக்கு முன்பாக வியாழக்கிழமை (18) பொல்ரோ கெப் வண்டியொன்றும் - டீமோ பட்டா லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஹந்த பாங்கொட பகுதிக்கு மீன் ஏற்றிச் சென்ற டிமோ பட்டா லொறி மற்றும் அங்குருவத்தோட்ட, வாரக்காகொடை பகுதிக்கு சென்று கொண்டிருந்த தனியார் வாகனமொன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.
விபத்தின் போது மீன் லொறியின் முன் இருக்கையில் இருந்த சாரதி உட்பட மூவரும், பின் இருக்கையில் இருந்த உதவியாளர் ஒருவருமே காயமடைந்துள்ளனர்.
டீமோ லொறியின் சாரதி தூங்கியதால், லொறி வீதியை விட்டு பாய்ந்து முன்னால் வந்த கெப் வண்டியில் மோதி இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஹொரணை பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago