2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

வாகன விபத்தில் மூத்த விரிவுரையாளர் பலி

Janu   / 2025 மார்ச் 19 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீரிகம - கண்டி அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் களனி பல்கலைக்கழகத்தின் உளவியல் பிரிவின் தலைவரும், மூத்த விரிவுரையாளருமான என்.டி. குணேந்திர கயந்த உயிரிழந்ததுடன் அவரது மனைவி, மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளதாக  மீரிகம பொலிஸார் தெரிவித்தனர்.

மீரிகமயிலிருந்து குருநாகல் நோக்கி சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் சிமென்ட் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று குறித்த வேன் மீது மோதியுள்ளது.  

விரிவுரையாளர் கயந்த உட்பட அவரது குடும்பத்தினர் யாழ்ப்பாணத்திலிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X