2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வாகன விபத்தில் சிறுமி பலி

Janu   / 2024 ஜூன் 26 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை – மத்துகம பிரதான வீதியின் ரேந்தைபோல பகுதியில், முச்சக்கர வண்டியுடன் மோதிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளம் சகோதரிகள் படுகாயமடைந்துள்ளதுடன், அதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர் .

தொடங்கொட பிரதேசத்தை சேர்ந்த 9 வயதுடைய சிறுமியே விபத்தில் உயிரிழந்துள்ளார். மற்றைய, 14 வயதுடைய சிறுமி நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

குறித்த சிறுமிகள் இருவரும் கடைக்கு செல்வதற்காக, வீதியில் பயணித்த போது களுத்துறையிலிருந்து மத்துகம நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .