2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

வாகன விபத்தில் இளைஞன் பலி

Janu   / 2024 டிசெம்பர் 04 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரொன்துடுவ தெல்கட சந்தி பகுதியில் ​மோட்டார் சைக்கிளுடன் டிப்பர் வாகனம் மோதி செவ்வாய்க்கிழமை (03) இரவு இடம் பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

மொரொன்துடுவ கோனதூவ பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய அசித உதயங்க சில்வா என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் , சுகயீனமடைந்து இருந்த தனது சகோதரனுக்கு உணவு வழங்கி விட்டு தனது நண்பனுடன் வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் போதே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது . விபத்தில் காயமடைந்த 17 வயதுடைய மற்றைய இளைஞன் சிகிச்சைக்காக களுத்துறை , நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தின் பின்னர் தப்பியோடிய 25 வயதுடைய டிப்பர் சாரதி, பிலியந்தலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .