Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Janu / 2025 மார்ச் 06 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகளிர் தினத்தன்று கொழும்பு காலிமுகத்திடலில் இருந்து பம்பலப்பிட்டி வரை 200க்கும் மேற்பட்ட மகளிர்கள் கலந்து கொள்ளும், Ride Colombo 25 துவிச்சக்கர வண்டியின் சக்தியால் மகளிர் பலப்படுத்தல் சக்தி வாய்ந்த ஒர் செய்தியை வழங்க உள்ளதாக கொழும்பு ரைடர் அமைப்பின் பிரதிநிதிகள் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தனர்.
இந் நிகழ்வில் சியாரா, மதுர தர்மரத்தின மற்றும் கொழும்பு பல்கலைக்கழக லியோ கழகத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதுடன் இதற்கு பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் அனுசரணை வழங்குகின்றனர்.
மேலும் மதுர தர்மத்ரத்தின தகவல் தருகையில்,
“ Ride Colombo 25 துவிச்சக்கர வண்டியின் சக்தியால் மகளிர் பலப்படுத்தல், உலகம் முழுவதும் உள்ள மகளிர் முன்னேற்றம், ஒற்றுமை மற்றும் உற்சாகம் நிறைந்த வாழ்க்கையை ஊக்குவிக்கும் ஒர் இயக்கமாகும். பீல் லங்கா மற்றும் அக்ரோஸ் சிலோன் இணைந்து திட்டமிட்டு நடத்தும் இந்த நிகழ்வு மகளிர் சமத்துவம், தலைமைத்துவம் மற்றும் நிலைபேறான சுற்றுலாத்துறை ஊக்குவிக்கிறது.
துவிச்சக்கர மகளிர் ஓட்டம் 2025 மார்ச் 8 ஆம் திகதி காலை 7.மணிக்கு காலி முகத்திடல் இருந்து கொள்ளுப்பிட்டி சந்தி பம்பலப்பிட்டி மரைன் வீதி 10 கி.மீட்டர் நடைபெறவுள்ளது.
இது ஓர் போட்டி நிகழ்வல்ல. இது மனவலிமை சகிப்புத்தன்மை மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் ஒர் இயக்கமாகும்
Ride Colombo 25 துவிச்சக்கர வண்டி ஓட்டுதல், மூலம் மகளிரை கொண்டாடுதல், என்ற விளக்கவுரையுடன் உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் சமூகப் பின்னணியில் இருந்து மகளிரை ஒன்றிணைந்து அவர்களின் துவிச்சக்கர வண்டி பயணத்தின் மீது கொண்டுள்ள ஆர்வத்தை இணைக்கும் ஒர் விடயமாக இது அமையும்.
இதன் மூலம் மகளிர்களின் கனவுகள் யோசனைகள் மற்றும் உற்சாகத்தை வளர்க்கும் ஒரு திறந்த சூழ்நிலையை உருவாக்குவதுடன் ஆரோக்கியமான மற்றும் அனைவருக்கும் சமமான சமுதாயத்தை உருவாக்க வலியுறுத்தும்.
மகளிரும் சுற்றுலாத்துறையும் நிலைபேறான மாற்றத்திற்கான நிறுவன சமூக பொறுப்புணர்வு முயற்சி இந்த நிகழ்வின் முக்கியமான ஒரு பகுதியாகும்.
இந்த திட்டம் இலங்கையில் உள்ள மகளிரை தயார்படுத்தி துவிச்சக்கர வண்டி சுற்றுலா வழிகாட்டிகள் உருவாக்க உதவுகிறது. இதன் மூலம் அவர்கள் தலைமைத்துவத்தை வளர்க்கவும் தொழில் முனைவோராக மாறவும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது.
இந்த முயற்சி இலங்கையின் கலாச்சார செல்வத்தையும் இயற்கை அழகையும் உலகிற்கு எடுத்துச் செல்லும் ஒர் மகளிர் தூதுவர் வலையமைப்பை உருவாக்க உதவும்.
நிகழ்விற்கான பதிவு தொகை மற்றும் நுழைவுச்சீட்டுகளிலிருந்து வரும் 100 வருவாய் இந்த நிறுவன சமூக பொறுப்புணர்வு முயற்சிகளுக்காக பயன்படுத்தப்படும் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் இந்தப் பயிற்சித் திட்டம் மூலம் மகளிரின் எதிர்காலத்தை வடிவமைக்க தேவையான கருவிகள் மற்றும் திறன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளளனர். ”
இப்போட்டியில் உலக நாடுகளில் இருந்தும் பல சுற்றுலாத்துறை மகளிர்கள் பங்குபற்றுவதற்காக இணக்கம் தெரிவித்துள்ளார்.
www.ridecolombo.com பார்வையிடவும்
அஷ்ரப் ஏ சமத்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago