2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

ரூ. 30 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள் மீட்பு

Mayu   / 2024 டிசெம்பர் 10 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிகேஜி கபில

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான, வெளிநாட்டு சிகரெட்டுகளை எடுத்துச் சென்ற இரண்டு பெண் விமானப் பயணிகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட  இருவரும் டுபாயில் வீட்டு வேலை செய்யச் சென்று அங்கு வேலை வாய்ப்பு கிடைக்காத நிலையில், இலங்கை தூதரகம் மற்றும் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் அவர்களை தற்காலிக கடவுச்சீட்டின் கீழ் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Fly Dubai Airlines இன் F.Z.-569 இல் துபாயிலிருந்து செவ்வாய்க்கிழமை 10) 12.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்தில், மான்செஸ்டர் ரகத்தைச் சேர்ந்த 20,000 சிகரெட்டுகள் அடங்கிய 100 சிகரெட் அட்டைப் பெட்டிகள், பயணப் பொதிகளில் மறைத்து கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இருவரில் ஒரு பெண் மொரட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதான ஒரு பெண் எனவும் மற்றைய பெண் 52 வயதான மீரிகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், அவர்கள் புதன்கிழமை (18) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X