Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Mayu / 2024 பெப்ரவரி 07 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ருமேனிய நாட்டு சுற்றுலா பயணியொருவர் இன்று (07) பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரகல்ல பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிஸ்டோரெஸ்கு டிடோரே என்ற 71 வயதான ருமேனிய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த ருமேனிய சுற்றுலா பயணி மொரகல்ல பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில், குறித்த ஹோட்டலுக்கு அருகில் உள்ள கடலில் நீராடச் சென்ற போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் மீட்கப்பட்டு பேருவளை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
சடலம் பேருவளை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
7 hours ago