Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2024 டிசெம்பர் 10 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலாபம், வட்டக்கல்லிய ரயில் கடவையில் வைத்து கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலில், மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிலாபம், வட்டக்கல்லிய பகுதியைச் சேர்ந்த தினுக ஸஷேந்திர பெரேரா என்ற 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த இளைஞனின் தாய், தந்தை மற்றும் இளைய சகோதரர்கள் இருவர் சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளதுடன் , குறித்த இளைஞனுக்கு தயாரிக்கப்பட்ட ஆவணங்களில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர்களுடன் அழைத்துச் செல்ல முடியாமல் போனதாகவும் அந்த பிரச்சனைகள் திருத்தப்பட்ட பின்னர் அவர் அமெரிக்கா செல்ல தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை விபத்தில் படுகாயமடைந்து, தற்போது சிலாபம் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் 20 வயதுடைய இளைஞன் தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாகவும், உரிய ஆவணங்களை தயாரித்து, விசா கிடைக்கும் வரை காத்திருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago