2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

யானை தாக்குதலில் பாகன் மரணம்

Janu   / 2025 மார்ச் 05 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹபரணை, புவக்பிட்டிய பாலத்திற்கு அருகில் வைத்து யானையின் தாக்குதலுக்குள்ளாகி யானைப்பாகன் உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (04) அன்று யானையை குளிப்பாட்டி விட்டு,  வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​,இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஹபரன பரண போல வீதியைச் சேர்ந்த ரோஷன் விராஜ் என்பவரின் பராமரிப்பில் இருந்த பொடி ராஜு என்ற  யானையால் தாக்குதல் நடத்தப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த யானை மீகொட, பழைய வீதியை சேர்ந்த பாரத அமரதுங்கவுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X