2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

முத்துராஜவெல முனையத்தில் 40 பவுசர்கள் தடுத்து வைப்பு

Editorial   / 2023 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முத்துராஜவெல முனையத்தில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருள் ஏற்றப்பட்ட சுமார் 40 பவுசர்கள் திங்கட்கிழமை (31) பிற்பகல் தடுத்து வைக்கப்பட்டதாகவும்,  அன்றிரவு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோல் நிலைய உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஏறக்குறைய 3 இலட்சம் லீற்றர் எரிபொருள் அந்த எரிபொருள் களஞ்சியசாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த எரிபொருளுக்கான அதிகரிக்கப்பட்ட விலையை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளை முன்பதிவு செய்யவில்லை என எரிசக்தி அமைச்சர் குற்றம் சுமத்திய பின்னணியில், இவ்வாறு பணம் செலுத்திய முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், அதனை தடுத்து வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என  உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து முத்துராஜவெல முனையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ​​ அதிகாலை வேலையிலேயே தான் வெளியேறியதால் இந்த சம்பவம் குறித்து தனக்கு தெரியாது என்று கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .