2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

மாமியாரைக் கொன்றவர் கைது

Simrith   / 2024 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது மாமியாரை கொலை செய்து மனைவி மற்றும் மகளை கூரிய ஆயுதத்தால் தாக்கி அவர்களுக்கு பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 44 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (20) மாலை கலபிடமடை லெவங்கம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பணத் தகராறில் மனைவி, மகள் மற்றும் மாமியார் ஆகியோருடன் வாய்த் தகராறில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாக்குவாதத்தில் மாமியாரின் தலையில் கல்லால் தாக்கிய நபர், பின்தொடர்ந்து வந்த மனைவி மற்றும் மகளை கூரிய ஆயுதத்தால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியுள்ளார். 

55 வயதுடைய மாமியார் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கலபிடமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .