Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Janu / 2024 ஜூன் 03 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாதம்பை, செம்புகட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவர் அவரது மாமாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
56 வயதுடைய நரசிம்ம கேசர பண்டாரநாயக்க சாம்சன் ஜயவீர என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சகோதரியின் மகனே இந்த கொலையை செய்துள்ளதாகவும்,
சந்தேக நபரும் இறந்தவரின் வீட்டிற்கு அருகில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பழைய தகராறு காரணமாக உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் சந்தேக நபர் வாளால் வெட்டி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரஸீன் ரஸ்மின்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago