2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

போதை குளிசைகளுடன் 2 சந்தேக நபர்கள் கைது

Mayu   / 2024 பெப்ரவரி 14 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்படை மற்றும் மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட  தேடுதல் நடவடிக்கையின் மூலம் 1472  Pregabalin   போதை குளிசைகளுடன் 02 சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதோடு ஒரு முச்சக்கர வண்டி  கைப்பற்றப்பட்டுள்ளது. 

இந்த சம்பவமானது செவ்வாய்க்கிழமை (13)   மன்னார் நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

எஸ்.றொசேரியன் லெம்பேட்

இதற்கமைய, சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் அதே பகுதியில் மீண்டும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட  போது  ஒரு வீட்டில் இருந்து 1432 Pregabalin போதை குளிசைகள்  மற்றும் முச்சக்கரவண்டியொன்றில் இருந்து அதே மருந்தின் 20 குளிசைகளுடன் உடன் மேலும்  ஒருவரை கைது செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சிலாவத்துறை மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த  28 மற்றும் 29 வயதுடையவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மருந்து மாத்திரைகள் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .